menu-iconlogo
logo

Yedho Nadakkiradhu

logo
Liedtext
ஹா ஹான் ஹா

ஹா ஹான் ஹா

ஒ ஓ ஒ

ஒ ஓ ஒ

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது

இறக்கை முளைக்கிறது

இதயம் பறக்கிறது..து

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது..

இறக்கை முளைக்கிறது..

இதயம் பறக்கிறது..து

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது..

மானே.. இளமானே

வா இன்னொரு வானம்

அமைத்திடுவோம்

வானில்.. சொந்த வானில்

வண்ண விண்மீன் எல்லாம்

பயிரிடுவோம்

நிலவு.. அந்த நிலவு

விடி விளக்காய் ஆகாதோ

மேகம்.. வெள்ளி மேகம்

வந்து ஜன்னல் திரைகள் ஆகுமோ..

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது

இறக்கை முளைக்கிறது

இதயம் பறக்கிறது..து

ஆதாம்.. அந்த ஏவாள்

மீண்டும் பிறந்தது போலே

பிறந்து விட்டோம்

ஆடை.. மேல் ஆடை

அது இருக்குது கண்ணா

மறந்து விட்டோம்

தனிமை.. ரொம்ப தனிமை

இங்கு தடங்கல் ஏதுமில்லை

பொறுங்கள்...கொஞ்சம் பொறுங்கள்

அங்கு போவது யார் அது தேவதை

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது

இறக்கை முளைக்கிறது

இதயம் பறக்கிறது..து

ஏதோ நடக்கிறது

இதமாய் இருக்கிறது

இறக்கை முளைக்கிறது

இதயம் பறக்கிறது..து