menu-iconlogo
logo

Nee Varuvai Ena Naan Irunthen

logo
Liedtext
இசை விஸ்வநாதன்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: கல்யாணி மேனன்

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை

வாராயோ..

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அடி தேவி உந்தன் தோழி

ஒரு தூதானாள் இன்று

அடி தேவி உந்தன் தோழி

ஒரு தூதானாள் இன்று

இரவெங்கே உறவெங்கே

உனை காண்பேனோ என்றும்

இரவெங்கே உறவெங்கே

உனை காண்பேனோ என்றும்

அமுத நதியில் என்னை

தினமும் நனைய விட்டு...

இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு...

தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு

வாராயோ..

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

அழகிய பாடலையும் தமிழ் வரிகளையும்

பதிவேற்றியவரை உங்கள்

பாடல் அழைப்பில் நினைவு படுத்தலாமே!

ஒரு மேடை ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

ஒரு மேடை ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

குழல் மேகம் தரும் ராகம்

அது நாடாதோ என்னை

குழல் மேகம் தரும் ராகம்

அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு

நகையை அணிந்து கொண்டு

விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு

எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல

வாராயோ..

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

Nee Varuvai Ena Naan Irunthen von Kalyani Menon - Songtext & Covers