menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ நாணமோ

ஓ... ஒஹொஹோ

நாணுமோ இன்னும் நாணுமோ

தன்னை நாடும் காதலன் முன்னே

திருநாளை தேடிடும் பெண்மை

நாணுமோ நாணுமோ

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ நாணமோ

தோட்டத்துப் பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

தோட்டத்துப் பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

ஆடையில் ஆடுது வாடையில் வாடுது

ஆனந்த வெள்ளத்தில் நீராடுது அது எது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது

காதலன் பெண்ணிடம் தேடுவது

காதலி கண்களை மூடுவது அது எது

நாணுமோ இன்னும் நாணுமோ

தன்னை நாடும் காதலன் முன்னே

திருநாளை தேடிடும் பெண்மை

நாணுமோ நாணுமோ

மாலையில் காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது

மாலையில் காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது

காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்

காதலி எண்ணத்தில் தேனாவது அது எது

உண்டால் மயக்கம் கள்ளாவது அது

உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது

உண்டால் மயக்கம் கள்ளாவது அது

உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது

நாளுக்கு நாள் மனம் நாடுவது

ஞானியின் கண்களும் தேடுவது அது எது

நாணமோ இன்னும் நாணமோ

இந்த ஜாடை நாடகம் என்ன

அந்த பார்வை கூறுவதென்ன

நாணமோ நாணமோ

ஓ ஹோ ஹோ

நாணுமோ இன்னும் நாணுமோ

தன்னை நாடும் காதலன் முன்னே

திருநாளை தேடிடும் பெண்மை

நாணுமோ நாணுமோ

ஆஹா ஆ... ஆஹா ஆ...

ஓஹோ ஓ... ஓஹோ ஓ... ம்... ம்...

Mehr von P. Susheela/T.M.Sounderarajan

Alle sehenlogo