menu-iconlogo
logo

Kanave Kalayade

logo
Liedtext
ஆ: கனவே கலையாதே

காதல்

கனவே கலையாதே

ஆ: கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடும்

ஓர் வாசகம்

ஆ: மரகத வார்த்தை

சொல்வாயா

மௌனத்தினாலே

கொல்வாயா

சின்ன திருவாய்

மலர்வாயா

ஆ: கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடும்

ஓர் வாசகம்

ஆ: கனவே கலையாதே

காதல்

கனவே கலையாதே

ஆ: நீ மௌனம்

காக்கும்போதும்

உன் சார்பில்

எந்தன் பேரை

உன் தோட்டப் பூக்கள்

சொல்லும் இல்லையா

பெ: ஒரு தென்றல்

தட்டும்போதும்

கடும் புயலே

முட்டும்போதும்

அட பூக்கள் பொய்கள்

சொல்வதில்லையே

ஆ: உன் இதழை கேட்டால்

அது பொய்கள் சொல்லும்

உன் இதயம் கேட்டால்

அது மெய்கள் சொல்லும்

பெ: ம்… இதயத்தை கேட்க

நேரமில்லை

இது வரை இதயத்தில்

யாருமில்லை

சந்து கிடைத்தால்

நுழைவாயா

ஆ: கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடும்

ஓர் வாசகம்

ஆ: உண்மை காதல்

உண்டு

அதை உள்ளே

வைத்துக்கொண்டு

ஒரு மன்மத சபையில்

சாபம் வாங்காதே

பெ: மெல்லிய மழையின்

துளிகள்

ஒரு மேகத்துக்குள்

உண்டு

அது தானே பொழியும்

பிழியப் பார்க்காதே

ஆ: நீ மழை தரும்

முகிலா

இல்லை இடி தரும்

முகிலா

என் வேர் நனைப்பாயா

இல்லை விலகிடுவாயா

பெ: ஆவணி மாதம்

கழியட்டுமே

கார்த்திகை வந்தால்

மழை வருமே

இன்னும் சில நாள்

பொறு மனமே

ஆ: கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடு

ஓர் வாசகம்

ஆ: கனவே கலையாதே

காதல்

கனவே கலையாதே

கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடும்

ஓர் வாசகம்

மரகத வார்த்தை

சொல்வாயா

மௌனத்தினாலே

கொல்வாயா

சின்ன திருவாய்

மலர்வாயா

கை ஏந்தியே

நான் கேட்பது

ஓர் யாசகம்

கண் ஜாடையில்

நீ பேசிடு

ஓர் வாசகம்

Kanave Kalayade von P. Unnikrishnan/K. S. Chithra - Songtext & Covers