menu-iconlogo
huatong
huatong
avatar

UYAR MALAIYO | உயர் மலையோ

Pastor John Jebarajhuatong
moocow450phuatong
Liedtext
Aufnahmen
எந்தப்பக்கம் வந்தாலும்

நீங்க என் கூடாரம்

தீங்கு என்னைஅணுகாது

துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட வந்தாலும்

துளியும் என்னை நெருங்காது

எந்தப்பக்கம் வந்தாலும்

நீங்க என் கூடாரம்

தீங்கு என்னைஅணுகாது

துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்

துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்

உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

என் இயேசுவை

முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்

பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு

சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம்

பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு

நான் எந்த நிலை என்றாலும்

என்னை விட்டு போகாமல்

நிற்பதல்லோ உம் அழகு

நான் எந்த நிலை என்றாலும்

என்னை விட்டு போகாமல்

நிற்பதல்லோ உம் அழகு

விட்டு கொடுக்காத பேரழகு

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

என் இயேசுவை

முழு மனதோடு ஆராதித்திடுவேன்

உலகத்தின் கண்ணில்

பெரும்பான்மை என்றால்

அதிகம்பேர் நிற்பதே

அவர் சொல்லும் கணக்கு

அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்

நீர் துணை நிற்பதால்

பெரும்பான்மை எனக்கு

அட ஊர் என்ன சொன்னாலும்

பார் எதிர் நின்னாலும்

பிள்ளையல்லோ நான் உமக்கு

அட ஊர் என்ன சொன்னாலும்

பார் எதிர் நின்னாலும்

பிள்ளையல்லோ நான் உமக்கு

நிகர் இல்லாத தகப்பனுக்கு

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

என் இயேசுவை

முழு மனதோடு ஆராதித்திடுவேன்

Mehr von Pastor John Jebaraj

Alle sehenlogo