menu-iconlogo
huatong
huatong
avatar

Roja malare rajakumari

Pb Sreenivas/P Susheelahuatong
mmissa3505huatong
Liedtext
Aufnahmen
ஆஹா...

ஆஹா...

ஆஹா...

ஆஹா...

ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா.. ஹோ..

வருவதும் சரிதானா

உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ.. ஹோ..

வேதம் இலையன்றோ

காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ.. ஹோ..

உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ..

வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து (ஆ ..)

காதலில் கலந்து (ஆ ..)

நாட்டை இழந்தவர் பலரன்றோ (ஆ ..)

மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும்

காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா.. ஹோ..

வருவதும் சரிதானா

உறவும் முறைதானா

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடை தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம்

ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம்

ஒரு மனமானோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ..ஹோ..

உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

Mehr von Pb Sreenivas/P Susheela

Alle sehenlogo