menu-iconlogo
huatong
huatong
avatar

Thanga Thamari Magale

S. P. Balasubrahmanyam/Malgudi Subhahuatong
pacheco.rosalindahuatong
Liedtext
Aufnahmen
தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

வெள்ளம் மன்மத வெள்ளம்

சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

வெள்ளம் மன்மத வெள்ளம்

சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

தங்கத் தாமரை மகளே வா அருகே

தங்கத் தாமரை மகளே

இள மகளே வா அருகே

செழித்த அழகில்

சிவந்து நிற்கும் செந்தேனே

என் கழுத்து வரையில்

ஆசை வந்து நொந்தேனே

வெறித்த கண்ணால்

கண்கள் விழுங்கும் பெண்மானே

உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே

காணாமல் நான் போனேனே

இருதயத்தின் உள்ளே

உலை ஒன்று கொதிக்க

எந்த மூடி போட்டு

நான் என்னை மறைக்க

தொடட்டுமா தொல்லை நீக்க..!?

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

பறக்கும் வண்டுகள்

பூவில் கூடும் கார்காலம்

கனைக்கும் தவளை

துணையைச் சேரும் கார்காலம்

பிரிந்த குயிலும்

பேடை தேடும் கார்காலம்

பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்

பிணைத்து வைக்கும் கார்காலம்

நகம் கடிக்கும் பெண்ணே

அடக்காதே ஆசை

நாகரீகம் பார்த்தால்

நடக்காது பூஜை

நெருக்கமே காதல் பாஷை

தங்கத் தாமரை மகளே வா அருகே

தத்தித் தாவுது மனமே வா அழகே

வெள்ளம் மன்மத வெள்ளம்

சிறு விரிசல் கண்டது உள்ளம்

இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

தங்கத் தாமரை மகளே

தத்தித் தாவுது மனமே

தங்கத் தாமரை மகளே

தத்தித் தாவுது மனமே

Mehr von S. P. Balasubrahmanyam/Malgudi Subha

Alle sehenlogo