menu-iconlogo
huatong
huatong
avatar

Nenjam Oru Murai Nee Enrathu

Srinivas/Mahalakshmi Iyerhuatong
mrspechuatong
Liedtext
Aufnahmen
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை பார் என்றது

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை பார் என்றது

ரெண்டு கரங்களும் சேர் என்றது

உள்ளம் உனக்குத தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ

முத்தம் எனக்கு தா என்றது

உள்ளம் என்ற கதவுகளோ

உள்ளே உன்னை வா என்றது

நீ தான் நீ தான் எந்தன் உள்ளம் திறந்து

உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்

நீ தான் நீ தான் எந்தன் உயிர் கலந்து

நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்

உன் முத்தம் தானே பற்றி கொண்ட முதல் தீ

கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த

உன் விரல் தானே நானும் தொட்ட முதல் பூ

உன் பார்வை தானே எந்தன்

நெஞ்சில் முதல் சலணம்

அன்பே என்றும் நீ அல்லவா

கண்ணால் பேசும் முதல் கவிதை

காலமுள்ள காலம் வரை

நீ தான் எந்தன் முதல் குழந்தை

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம்

ஆனால் உள்ளே அது தீயின் உருவம்

காதல் வந்தால் இந்த பூமி நழுவும்

பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்

ஒரு தட்பவெப்ப மாற்றங்களும் நிகழும்

காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்

அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்

இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்

காதல் என்ற வார்த்தையிலே

ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்

காதல் என்ற காற்றினிலே

தூசி போல நாம் அலைவோம்

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை பார் என்றது

ரெண்டு கரங்களும் சேர் என்றது

உள்ளம் உனக்குத தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ

முத்தம் எனக்கு தா என்றது

உள்ளம் என்ற கதவுகளோ

உள்ளே உன்னை வா என்றது

Mehr von Srinivas/Mahalakshmi Iyer

Alle sehenlogo