menu-iconlogo
huatong
huatong
avatar

Nilavu Oru Pennaagi

T. M. Soundararajan/M. S. Viswanathanhuatong
nealpedowitzhuatong
Liedtext
Aufnahmen
நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம்மா..றி

நீந்துகின்ற குழலோ...

நீந்துகின்ற குழலோ...

மாதுளையில் பூப்போலே

மயங்குகின்ற இதழோ

மாதுளையில் பூ..ப்போலே

மயங்குகின்ற இதழோ

மானினமும் மீனினமும்...

மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம்மா..றி

நீந்துகின்ற குழலோ...

நீந்துகின்ற குழலோ...

உங்களுக்காக வழங்குவது

ரிதின்ரீமா மணிபாலன்

புருவமொரு வில்லாக...

பார்வையொரு கணையாக ..

புருவமொரு வில்லாக...

பார்வையொரு கணையாக...

பருவமொரு களமாக..

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில் .

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்..

தேன் சுவையைத் தான் குழைத்து..

கொடுப்பதெல்லாம் இவன் தானோ

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம்மா..றி

நீந்துகின்ற குழலோ...

உங்களுக்காக வழங்குவது

ரிதின்ரீமா மணிபாலன்

பவளமென விரல் நகமும்ம்

பசுந்தளிர்போல் வளை கரமும்ம்ம்

தேன் கனிகள் இருபுறமும்..

தாங்கி வரும் பூ ங்கொடியோ?

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ...

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ...

யாழிசையின் ஒலியாக...

வாய்மொழிதான் மலர்ந்தவளோ?

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம்மா..றி

நீந்துகின்ற குழலோ...

நீந்துகின்ற குழலோ...

மாதுளையில் பூப்போலே

மயங்குகின்ற இதழோ

மாதுளையில் பூ..ப்போலே

மயங்குகின்ற இதழோ

மானினமும் மீனினமும்ம்ம்

மயங்குகின்ற விழியோ..

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ..

நீரலைகள் இடம்மா..றி

நீந்துகின்ற குழலோ...

நீந்துகின்ற குழலோ...

Mehr von T. M. Soundararajan/M. S. Viswanathan

Alle sehenlogo