ஆ: ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம்
என்னோடு பேசவா
ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம்
என்னோடு பேசவா
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை
பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும்
ஓ தென்றலே
ஹோ தென்றலே
ஆ: முதல் காதல் முதல் முத்தம்
ரெண்டும் மறக்குமா
ஹோ
முதல் காதல் பூமுத்தம்
ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்
வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம்
நெஞ்சமோ உன்னிடம்
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும்போதும்
என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு
ஓ தென்றலே
ஹோ தென்றலே
ஆ: கிளிகள் காணும் நேரத்தில்
மீனாட்சி ஞாபகம்
ஹா
கிளிகள் காணும்
நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
நிலவில் நானும் பார்க்கின்றேன்
நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை
உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை
என் கண்ணில் மிதக்கும் கனவை
எடுத்துசொல்லு
பெ: ஹோ தென்றலே
என் தோளில் சாயவா
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்
உன்னோடு பேசவா
ஓ தென்றலே
ஹோ தென்றலே
ஹோ தென்றலே