menu-iconlogo
logo

Unakkenna Venum Sollu

logo
Lyrics
உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடி போவோமே

பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு

நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு

ஒரு வெயில் ஒரு நிலவு

தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே

உலகென்னும் பரமபதம்

விழுந்தபின் உயர்வு வரும்

நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ

அணியாத வைரம் போல அந்த

வானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ

அணியாத வைரம் போல அந்த

வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று

தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே

எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து

அதன் வழி எனது கனா காண சொல்லியதே

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்

உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடி போவோமே

பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு

நீந்திப் பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட

இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே

எழுதிடும் உன் விரலில்

சிரித்திடும் உன் இதழில்

கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே

துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று

ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு

உலகத்தை காட்டச் சொல்லு

புது இடம் புது மேகம் தேடி போவோமே

பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு

நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு

ஒரு வெயில் ஒரு நிலவு

தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே

உலகென்னும் பரமபதம்

விழுந்தபின் உயர்வு வரும்

நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே

ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ

அணியாத வைரம் போல அந்த

வானம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல

இந்த பூமி சிணுங்கும் கீழ

அணியாத வைரம் போல அந்த

வானம் மினுங்கும் மேல