செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக
கண்ணே வருக
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக
கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நல்ல மதுவண்டோ
முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நல்ல மதுவண்டோ
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக கண்ணே வருக
புகுந்த வீட்டின் புது வரவு
நீ பூத்து குலுங்கும் புது நினைவு
மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு..
அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு
இளமை தரும் மயக்கம்
இனிமை அதில் பிறக்கும்
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே
வருக கண்ணே வருக
நீல வானின் முழு நிலவே
உன்னை நெருங்கி மகிழும் என் மனமே
ஆசை மனதின் பெண்ணமுதே
உனை அருந்த துடிக்கும் என் உறவே
பெ: கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
கொடுத்தேன் என்னை கொடுத்தேன்
எடுத்தேன் அள்ளி எடுத்தேன்
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே
வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த
மன்னவன் நீயோ
மல்லிகையின் நல்ல மதுவண்டோ
செந்தாமரையே செந்தேன் இதழே
பெண்ணோவியமே கண்ணே வருக
கண்ணே வருக