குலசாமி தந்த வரமா
எங்க அப்பா பாத்த பொண்ணு
இந்திரன் சந்திரன் எல்லாம்
நேரில் அட்சத தூவும் நின்னு
குலமகளாக வந்து
எங்க குடும்பத்த தாங்கும் கண்ணு
சென்மம் முழுசும் தாங்க
இனி உயிர எண்ணும் ஒன்னு
கண்ணாளமே கண்ணாளமே
கட்டிக் கொள்ள போறேனே
கண்ணாலத்தான் கண்ணாலத்தான்
பேசிக் கொள்ள வாறானே
உறவெல்லாம் சேத்துவைக்கும்
உறவும் நீயே... நீயே
உறங்காம தவிச்சேன் நான்
அட உன்ன பாத்திடதானே
இந்த ஊரு மெச்ச
கைய பிடிக்க வாறேன் புள்ள
நீ கேட்டுபுட்டா
உசுர அள்ளித் தாரேன் மெல்ல
உன் வளையோச கேட்க கேட்க
சொக்கி போவேன் மயங்கிபோவேன்
நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்
நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்
ராசாதிக்கே
ஒரு ராசா வாறான்
நம்ம தங்கத்துக்கே
மவராசன் வாறான்
அடி அல்லி பூவே புள்ளி மானே
அந்தி சாயும் வேளையில
சல சல சல சல சல
ஒத்த சொல்லு ஒத்த சொல்லு(சொல்லு)
நீ சொன்னா போதும் நில்லு
ஒரு பந்தக்காலு நட்டு வைக்க
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே(தோன்றுமே)
மஞ்ச தாலி மஞ்சள் தாலி(மஞ்சள் தாலி)
மணிக்கழுத்தில் ஏறிடவே
அந்த மந்திரம் முழங்க மங்கலம் ஒலிக்க
இன்பம் கோடி நீளுமே
மின்னும் வெள்ளி மீன் எடுத்து
உன் காலில் கொலுசாய் நான் இடுவேன்
கண்ணில் இமையைப் போல் இருந்து
உன் நிழலைப் போல நான் வருவேன்
அன்னம் தண்ணி தேவையில்ல
அடி உன்ன பத்தி பேசயில
உன் அழக பத்தி பேசயில
இந்த பூமியில் புதுசா பாஷை இல்ல
என்ன தாலட்டவே பாராட்டவே
வாழ்வில் துணையாய் நீ வரவே
நான் பொண்ணு பாக்க போறேன்
பொண்ணு பாக்க போறேன்
தேவதைய பாக்க போறேன்
நான் உன்ன பாக்க வாறேன்
உன்ன பாக்க வாறேன்
வெத்தலைய மாத்த போறேன்
கண்ணாளனே கண்ணாளனே
என் ஜீவனே நீதானே
உன்னோடுதான் உன்னோடுதான்
எப்போதுமே வாழ்வேனே
ராமரப்போல தருமரப்போல
என் பாசக்காரன் வந்தான்
பாசத்தையும் நேசத்தையும்
அவன் அள்ளி அள்ளி தந்தான்
அவன் சிரிச்சதுமே
சொக்கிபுட்டேன் நான் உடனே
அவன் நடந்து வந்தா
சொக்கநாதர் போலவே
அவன் தமிழ் பேச்ச கேட்க கேட்க
கிறங்கி போனேன் மயங்கி போனேன்
என் சொக்கத்தங்க மாமா
சொக்கத்தங்க மாமா
உன்ன போல யாரும் இல்ல
அந்த மதுர வீரன் சாமியபோல
வச்சிருக்கேன் மனசுக்குள்ள