menu-iconlogo
huatong
huatong
devaswarnalatha-merku-seemailaa-cover-image

Merku Seemailaa..

Deva/Swarnalathahuatong
sculptinchuatong
Lyrics
Recordings
அம்மா!, தாயே!

மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே

கதை ஒன்னு நடக்குதம்மா

காட்டு புலி ஒன்னு காயம்பட்டு போச்சே

காரணம் யார் சொல்லம்மா?

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட

தாயே நீ பொங்கிடம்மா!

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட

தாயே நீ பொங்கிடம்மா!

சூலக்காளியே, ஆத்தா, தாயே!

சூலக்காளியே, ஆத்தா, தாயே!

மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே

கதை ஒன்னு நடக்குதம்மா

பம்ப சத்தம் கொட்டு சத்தம் கேட்கலையா சொல்லு தாயே?

வெட்டருவா வேலு கம்பு சூலாயுதம் ஏந்தி வாடி!

எட்டு திசை கட்டி ஆண்டுவந்தானே

எத்தனையோ கஷ்டம் தீர்த்து வச்சானே

தாயே!, அம்மா!

ஊரெல்லாம் உசுருன்னு நேசம் வைச்சேனே

சனமெல்லாம் பெருசுனு ஆசை பட்டானே

தாயே, அம்மா!

மகமாயி தாயே நீ மனம் மாறனும்

மகராசன் கோட்டையில் குடி ஏறனும்

கருமாரி தாயே நீ கண் பார்க்கனும்

காயங்கள் மாறித்தான் மண்ணாலானும்

குங்கும காரியே

குறை தீர்க்கும் தேவியே

உன் பிள்ளை வாடுதம்மா

முத்துமாரியே, ஆத்தா, தாயே!

காதல் வசப்பட்டு பார்த்தது தப்பா

கழுத்தில் மாலை விழ நினைச்சது தப்பா

தாயே!, அம்மா!

கல்யாணம் தான் மாறி போனது தப்பா

காத்திருந்து நானும் வாழ்ந்தது தப்பா

தாயே, அம்மா!

சூறாவளி காத்து சுத்தி வந்து

சொந்தமெல்லாம் மாறி போனதம்மா

காத்திருந்து சொந்தம் வேணும்முன்னு

நேத்திக்கடன் செய்ய வந்தேனம்மா

பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு வந்தேன்

வேற என்ன கேட்டேனம்மா

முத்துமாரியே, ஆத்தா, தாயே!

மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே

கதை ஒன்னு நடக்குதம்மா

மேற்கு சீமையிலே வேகாட்டு கோவிலிலே

கதை ஒன்னு நடக்குதம்மா

காட்டு புலி ஒன்னு காயம்பட்டு போச்சே

காரணம் யார் சொல்லம்மா?

சாட்டை உடுக்கையில் சத்தம் முழங்கிட

தாயே நீ பொங்கிடம்மா!

சூலக்காளியே, ஆத்தா, தாயே!

சூலக்காளியே, ஆத்தா, தாயே!

ஏ-ஏ-ஏ, ஏ-ஏ-ஏ

More From Deva/Swarnalatha

See alllogo