M)உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
F)ஒறவே மனம் தேம்புதே.......
உசுரே தர ஏங்குதே....
M)நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
F)என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
F)இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
கண்ணீரிலே காவியம்
தண்ணீரிலே ஓவியம்
வரையோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமா.....
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
M)என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
M)இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அதை தேடுதே
காயும் இருள் நானடி,
பாயும் ஒலி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........
F)என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
M)ஒறவே மனம் தேம்புதே.......
F)உசுரே தர ஏங்குதே....
M)நீ எங்கேயும் காணாமல் எங்கேதான் போனாயோ
F)உன்ன இப்ப பாக்கனும்...