menu-iconlogo
logo

Sakkarai Nilave

logo
Lyrics
சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்கை என்னும் காட்டை எரித்து

குடை காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு

சக்கரை நிலவே பெண் நிலவே

காணும் போதே கரைந்தாயே

நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

maestro k i y a s

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே அந்த வார்த்தை இல்லை

அன்பே உன் புன்னகை எல்லாம்

அடி நெஞ்சில் சேமிதேன்

கண்ணே உன் பொன்னகை எல்லாம்

கண்ணீராய் உருகியதே

வெள்ளை சிரிப்புகள் உன் தவறா ?

அதில் கொள்ளை போனது என் தவறா ?

பிரிந்து சென்றது உன் தவறா ?

நான் புரிந்து கொண்டது என் தவறா ?

ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்

சதையல்ல கல்லின் சுவரா ?

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

என் பிஞ்சு நெஞ்சு

maestro kiyas

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்

எனக்கும் கூட நனைதல்

மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்

நான் குளிப்பேன் என்றேன்

எனக்கும் அந்த குளியல்

மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றால்

சுசீலா ' வின் குரல் என்றேன்

எனக்கும் அந்த குரலில் ஏதோ

மயக்கம் என நீ சொன்னாய்

கண்கள் மூடிய புத்தர் சிலை

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்

தயக்கம் என்பது சிறிதும் இன்றி

அது எனக்கும் எனக்கும்

தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

(சக்கரை நிலவே ...)

Sakkarai Nilave by Harish Raghavendra - Lyrics & Covers