(ஹேஹேஹேஹே)
அன்னாந்து பார்க்க வைக்கும்
ஆகாயம் காப்பவனே
மண் தாங்கும் மாவீரா
மலை ஏற நீ எழும்பு
(ஹேஹேஹேஹே)
அண்டோம் கிடுகிடுங்க
ஆகாயம் நடுநடுங்க
முள்ளாணி கோலேந்தி
முன்னேறி... வா
அண்டோம் கிடுகிடுங்க ஆகாயம் நடுநடுங்க
முள்ளாணி கோலேந்தி முன்னேறி வா
பங்கம் பதுபதுங்க பகையும் ஒதுஒதுங்க
மங்காத மூச்சேந்தி மண்ணாழ வா
வீரன் வாரான்... ஆஆஆ
(யேயேயே... மா... வீரா)
மண்டிப் போட வச்ச போதும்
அஞ்சிடாத சிங்கமாக துள்ளி நீயும் சீறிப்பாய
தீப் போல வா
உச்சி மேட்ட தொட்டுப் பாத்த
உள்ளங்கைய சுண்டிப் போடு பஞ்சம் ஓடும்
சுட்டெறிக்க நீ ஓடி வா
தெய்வம் என்றாலே, வஞ்சம் கொள்ளாதே
வெல்லும் அன்பாலே, மாறாதடா
வழியார் அடிபணிய, வழியோ அன்பாக
வரமாய் இங்கே தான்
வீரன் வந்தானையா
தென்னவனே... ஹேஹே
வென்றவனே... ஆஆஆ
அறம் காத்து வாழ்ந்திட
அரசாலும் வீரனே
விடை தேடிக் கூறிட
வினையாகும் வீரனே
ஊர காத்து நிக்க வீரன் வந்தானையா