menu-iconlogo
huatong
huatong
avatar

Kamalam Paatha Kamalam

IsaiGnani/K.J.Yesudass (Mogamul)huatong
🎧🎼SIVAM🌀CHANDRABOS🎼🎧huatong
Lyrics
Recordings
ஆஹ் அஹஹ் அஹ் அஹஹ் அஹ் அஹஹ் அஹ்

அஹஹ் அஹ் அஹஹ் அஹ் அஹ்ஹா ஆஹ் அஹஹ்

அஹஹ்ஹ அஹ் அஹஹ் அஹஹ் ஆஹ்ஹா அஹஹ்

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம்

உயர்மறையெல்லாம் புகழும்

கமலம் பாத கமலம் இசையான வடிவான

இறைவன் நீதான் என்று நான் தொழும்

தலைவன் நீதான் என்று போற்றிடும் கமலம் பாத கமலம்

உயர்மறையெல்லாம் புகழும் கமலம் …..

ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்

காகங்கள் விழித்து கரைகின்ற பொழுதில்

நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும்

வில்வண்டி இழுக்கும்

மாட்டின் மணியோசை மயக்கும்

இதமான இளங்காற்று எனைத்தீண்டி திரும்பும்

மெதுவாக இசைஞானம் மனதோடு அரும்பும்

ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க

அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர்மறையெல்லாம் புகழும்

கமலம் பாத கமலம் இசையான வடிவான

இறைவன் நீதான் என்று நான் தொழும்

தலைவன் நீதான் என்று போற்றிடும் கமலம் பாத கமலம்

உயர்மறையெல்லாம் புகழும் கமலம் …..

நாவாரப்பெரியோர் நிதமிங்கு இசைக்கும்

தேவாரப்பதிகம் திசைதோறும் ஒலிக்கும்

மும்மூர்த்தி பிறந்து சாஹித்யம் புனைந்து

செம்மூர்த்தி நினைவில் தெய்வ சங்கீதம் வளர்த்து

திருவீதி வலம்வந்த தலமிந்த தலம்தான்

இசைமாரி நிதம் பெய்த இடம் இந்த இடந்தான்

நினைத்தால் மனத்தால் துதித்தால்

நலமுருகி இசைநயங்களை வழங்கிடும்

கமலம் பாத கமலம் உயர்மறையெல்லாம் புகழும்

கமலம் பாத கமலம் இசையான வடிவான

இறைவன் நீதான் என்று நான் தொழும்

தலைவன் நீதான் என்று போற்றிடும் கமலம் பாத கமலம்

உயர்மறையெல்லாம் புகழும் கமலம் பாத கமலம்…

More From IsaiGnani/K.J.Yesudass (Mogamul)

See alllogo