menu-iconlogo
logo

Mayanginen Solla Thayanginen

logo
Lyrics
பெண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ

ஆண் : மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே

பாடியவர்கள்

ஜெயச்சந்திரன் P.சுசீலா

ஆண்: உறக்கமில்லாமல்

அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்

இரக்கமில்லாமல்

என்னை நீ வாட்டலாமோ நாளும்?

வாடைக்காலமும்

நீ வந்தால் வசந்தமாகலாம்

கொதித்திருக்கும்

கோடைக்காலமும்

நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

பெண் : எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ

துன்பக் கவிதையோ கதையோ?

ஆண்: இரு கண்ணும் என் நெஞ்சும்

பெண்: இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

ஆண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

பெண் : தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

ஆண் : இங்கு நீயில்லாமல்

வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே

ஆண்: ஒரு பொழுதேனும்

உன்னோடு சேர்ந்து வாழணும்,

உயிர் பிரிந்தாலும்

அன்பே உன் மார்பில் சாயணும்

பெண்: மாலை மங்கலம்

கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

ஆண்: மணவறையில் நீயும் நானும்தான்

பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

பெண்: ஒன்றாகும் பொழுதுதான்

இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!

ஆண்: அந்த நாளை எண்ணி நானும்

பெண் : அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்

பெண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

ஆண் : தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே மனமே!

பெண் : இங்கு நீயில்லாது

வாழும் வாழ்வுதான் ஏனோ?

ஆண் :மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே!

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் தவிக்குதே