ஆ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ...
பெ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ..
ஆ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆ : மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
பெ : உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆ : தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலை வாசல் வந்ததின்று
பெ : தென்பாண்டி மன்னன் என்று
திரு மேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று..
ஆ : இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்
பெ : கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்
ஆ : கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட
பெ : நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆ : மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய்க் கூட
பெ : உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
அழகிய பாடலையும் தமிழ் வரிகளையும்
பாடலில் பிழைகள் இருப்பின்
inbo email மூலம் அறிவியுங்கள்.
பெ : தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி
வீசும் கோவில் தீபம்
ஆ : வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி
பேச்சில் கேட்கக் கூடும்
பெ : அடியாளின் ஜீவன்
மேவி அதிகாரம் செய்வதென்ன
ஆ : அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன
பெ : இசை வீணை வாடுதோ
இதமான கைகளை மீட்ட
ஆ : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
பெ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
பெ : மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
ஆ : உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெ : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆ : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ