மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சுத் தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு
தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே
இந்தக் கன்னி வா மாமா
குடகு மலைக் காற்றில் வரும்
பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான்
உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காற்றில் ஒரு
பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி
குடகு மலைக் காற்றில் வரும்
பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி