menu-iconlogo
logo

Muthamil Kaviye Varuga

logo
Lyrics
திரைப்படம்: தர்மத்தின் தலைவன்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: யேசுதாஸ், சித்ரா

ஏற்கனவே இப்பாடலை பதிவேற்றியிருக்கும்

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

பெ:முத்தமிழ் கவியே வருக

முக்கனி சுவையே வருக

முத்தமிழ் கவியே வருக

முக்கனிச் சுவையே வருக

காதலென்னும் தீவினிலே

காலங்கள் நாம் வாழ

நாள் வந்தது

ஆ: முத்தமிழ் கலையே வருக

முக்கனிச் சுவையும் தருக

காதல் என்னும் தீவினிலே

காலங்கள் நாம் வாழ

நாள் வந்தது..

முத்தமிழ் கலையே வருக

முக்கனிச் சுவையும் தருக ஓ..

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!

பெ: காதல் தேவன் மார்பில் ஆடும்

பூமாலை நான்

காவல் கொண்ட மன்னன் நெஞ்சில்

நான் ஆடுவேன்

ஆ: கண்கள் மீது ஜாடை நூறு

நான் பார்க்கிறேன்

கவிதை நூறு தானே வந்து

நான்.. பாடினேன்

பெ: மூடாத தோட்டத்தில்

ரோஜாக்கள் ஆட..

தேனோடு நீ ஆட

ஓடோடி வா

ஆ: காணாத சொர்க்கங்கள்

நான் காணத் தானே

பூந்தென்றல் தேரேறி

நீ ஓடி வா..

பெ: காலங்கள் நேரங்கள்

நம் சொந்தம்

இன்பம் கோடி ஆஆ..

ஆ: ஆ.. முத்தமிழ் கலையே வருக

முக்கனிச் சுவையும் தருக..ஹோய்..

விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய

(Super HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

ஆ: சங்கம் கொள்ளும்

தமிழ் காதல் சிந்து..

கொஞ்சம் கெஞ்சும்

வண்ணம் ஒரு ராகம் சிந்து..

பெ: நெஞ்சம் எந்தன் மஞ்சம்

அதில் அன்பை தந்து

தந்தோம் தந்தோம்

என்று புது தாளம் சிந்து..

ஆ: வார்த்தைக்குள் அடங்காத

ரசமான சரசம்

நான் ஆட ஒரு மேடை

நீ கொண்டு வா..

பெ: என்றைக்கும் விளங்காத

பல கோடி இன்பம்

யாருக்கும் தெரியாமல்

நீ சொல்ல வா..

ஆ: காலங்கள் நேரங்கள்

நம் சொந்தம்

இன்பம் கோடி ஆஆ..

பெ: ஆ..முத்தமிழ் கவியே வருக

முக்கனிச் சுவையே வருக

ஆ: காதலென்னும் தீவினிலே

காலங்கள் நாம் வாழ

நாள் வந்தது..

பெ: முத்தமிழ் கவியே வருக

முக்கனிச் சுவையே வருக

ஆ: முத்தமிழ் கலையே வருக

முக்கனிச் சுவையும் தருக ஹோ..