உன்னைப்போல நானும்
ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும்
கிளிப் பிள்ளை நானே
உன்னைப்போல நானும்
மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில்
விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம்
என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான்
பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே