menu-iconlogo
logo

Adhikaalai Suga Velai அதிகாலை சுகவேளை

logo
Lyrics
அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

காதல் சொன்ன காகிதம்

பூவாய்ப் போனது

வானில் போன தேவதை

வாழ்த்துச் சொன்னது

ஒரு தத்தை கடிதத்தை

தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அன்பே வா வா அணைக்கவா

நீ நிலவுக்குப் பிறந்தவளா

போதை வண்டே பொறுத்திரு

இன்று மலருக்குத் திறப்பு விழா

உன்னை வந்து பாராமல்

தூக்கம் தொல்லையே

உன்னை வந்து பார்த்தாலும்

தூக்கம் இல்லையே

ஒரு பாரம் உடை மீறும்

நிறம் மாறும் தனியே

இதழ் ஓரம் அமுதூறும்

பரிமாறும் இனியே

அடி தப்பிப்போகக் கூடாதே

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

தென்றல் வந்து தீண்டினால்

இந்த தளிர் என்ன தடை சொல்லுமா

பெண்மை பாரம் தாங்குமா

அந்த இடை ஒரு விடை சொல்லுமா

என்னைச் சேர்ந்த உன்னுள்ளம் ஈரம் மாறுமா

தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா

இளங்கோதை ஒரு பேதை

இவள் பாதை உனது

மலர் மாலை அணியாமல்

உறங்காது மனது

இது போதும் சொர்க்கம் வேறேது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

காதல் சொன்ன காகிதம்

பூவாய்ப் போனது

வானில் போன தேவதை

வாழ்த்துச் சொன்னது

ஒரு தத்தை கடிதத்தை

தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது

அதிகாலை சுகவேளை

உன் ஓலை வந்தது