F: என்னை வெல்ல இங்கு
யாரும் இல்லை என்ற
எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னைப் பார்த்தவுடன்
என்னைத் தோற்றுவிட்டு
வெட்கத்தில் தலை குனிந்தேன்
M: அன்பே ஓர் நிமிடம்
உன்னை மறந்திருக்க
என்னாலே முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க
உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்கவில்லை..
F: சின்ன சின்னக் கூத்து
நீ செய்யிறத பார்த்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்...
M: வண்ண வண்ணப் பாதம்
நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய், நான்" இருப்பேன்
F: கவலைகள் மற"க்குதே
கவிதைகள் பிறக்குதே
உன்னருகே நான் இருந்தால்
தினம், உன்னருகில் நா"ன் இருந்தால்
M: எந்தன் உயிரே
எந்தன் உயிரே
கண்கள் முழுதும்
உந்தன் கனவே