கருப்பு நிலா...
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்..
துளித்துளியா..
கண்ணீர் விழுவதேன்..
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்.
துளித்துளியா, கண்ணீர் விழுவதேன்,,
சின்ன மானே மாங்குயிலே– உன்
மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும்வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே..
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்..
துளித்துளியா..
கண்ணீர் விழுவதேன்..
பத்து மாசம் மடியேந்தி..
பெத்தெடுத்த மகராசி
பச்சபுள்ள உன்ன விட்டு..
போனதெண்ணி அழுதாயா..
மாமன் வந்து எனைக்காக்க
நானும் வந்து உனைக்காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக..
காலம் உள்ள காலம்..
வாழும் இந்த பாசம்..
பூவிழி இமைமூடியே சின்ன
பூவே கண்ணுறங்கு..
கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துளியா கண்ணீர் விழுவதேன்..
வண்ண வண்ண முகம்காட்டி
வானவில்லின் நிறம்காட்டி
சின்னச் சின்ன மழலைபேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர்போலே
சொக்க வெள்ளி மணிபோலே
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா..
பாட்டு தமிழ் பாட்டு..
பாட, அதை கேட்டு..
ஆடிடும் விளையாடிடும்
தங்கத்தேரே நீதானே..
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்..
துளித்துளியா..
கண்ணீர் விழுவதேன்..
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்..
துளித்துளியா..
கண்ணீர் விழுவதேன்..
சின்ன மானே மாங்குயிலே– உன்
மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும்வரை
எட்டு திசையாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே...
கருப்பு நிலா..
நீதான் கலங்குவதேன்..
துளித்துளியா..
கண்ணீர் விழுவதேன்..