சீயஞ் சிறுகிக்கிட்ட
சீவன தொலாச்சுட்டன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சுட்டன்
உள்ள பட்றய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்குட்டு
இவ வீதியில் வாரத
வேடிக்கப் பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு
இடுக்கியே இடுக்கியே
அடிக்கிறா அடுக்கியே
வெய்யோன் சில்லி
இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணால
உட்டாளே தெறிக்கிறேன்
ஒட்டார சிட்டலா
மப்பாகி கெடக்குறன்
என் உசுருல சல்லட சலிச்சு
ஏஞ்சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியா
மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா
ஓய் என் உசுருல சல்லட சலிச்சு
ஏஞ்சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியா
எங்காது ஜவ்வுல எசையும் ஒவ்வுல
நீ மட்டும் பேசடி
ஏழெட்டும் நாளுட்டும் எதுவும் உங்கல
இச்சொன்னு வீசுடி
கன்னலு ஒதடு மின்னலு தகடு
எனக்குத் தானடி
சட்டையில் பாக்கெட்ட தச்சது
உன்னய பதுக்கத்தானடி
தின்னாஆணம் வச்சுத் தின்னா
உள்ள ங்கொக்கா மக்கா நின்னா
என் உசுருல சல்லட சலிச்சு
ஏஞ்சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியா
தொரட்டி கொரல பெரட்டி இவிய
இதயம் பறிச்சியே
கரெண்டு கம்பிய சொரண்டிக் கேடந்த
கதண்ட எரிச்சியே
ஓ பதனம் உதற கவனஞ்சேதற
மனச கலச்சியே
கருக்க பொழுதில் சிரிச்சு தோலாச்சு
பகல படச்சியே
தீயா இவ வந்தா
மண்ட வெல்லந் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா
என் உசுருல சல்லட சலிச்சு
ஏஞ்சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியா
வெய்யோன் சில்லி
இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணால
உட்டாளே தெறிக்கிறேன்
ஒட்டார சிட்டலா
மப்பாகி கெடக்குறன்