நீ தான் நீ தான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீ தான் நீ தான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம் தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல் தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வை தானே
எந்தன் நெஞ்சில் முதல் சலணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை
நீ தான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது