மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
அம்மம்மா...
முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம்
ஒரு காவியமே
சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து
முட்டிக்கொண்ட போதும் இங்கு
காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
ஆ...
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல
ஆ...
மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே...