ஆ: நான் என்றால்
அது அவளும் நானும்
அவள் என்றால்
அது நானும் அவளும்
நான் என்றால்
அது அவளும் நானும்
அவள் என்றால்
அது நானும் அவளும்
பெ: Yea…, the whole truth…
ஆ: நான் சொன்னால்
அது அவளின் வேதம்
அவள் சொன்னால்
அது தான் என் எண்ணம்
பெ: I am nothing, but true…
ஆ: அது தான் என் எண்ணம்….
நான் என்றால்
அது அவளும் நானும்
அவள் என்றால்
அது நானும் அவளும்
💙💙~ Prakash 31 ~💙💙
ஆ: கட்டிய கணவன்
கட்டளை படியே
காரியமாக்கும் குணமுடையாள்
பெ: in thoughts word and deed…
ஆ: நான் செய்தமுடிவை
தான் செய்த முடிவாய்
நினைத்தே,
பார்க்கும் மனமுடையாள்
பெ: Such a noble heart..
ஆ: புருஷனுக்கு
அருகே சரிசமமாக
அமர்ந்திடத் தயங்கும்
பண்புடையாள்
ஆ… ஆ…. ஆ…
பெ: Ohh.. There he goes.. again
ஆ: கடவுளின் மேலாய்
கணவனை மதித்து
வணங்கிடும்
இனிய அன்புடையாள்
பெ: ம்…, God bless, me…
ஆ: இனிய அன்புடையாள்
நான் என்றால்
அது அவளும் நானும்
அவள் என்றால்
அது நானும் அவளும்
💙💙~ Prakash 31 ~💙💙
ஆ: ஆண் மகன் வகுத்த
எல்லையை கடந்து
நடந்தாள் ராகவன் தலைவி….
பெ: Remember, what happened to her
ஆ: கணவன் கிழித்த கோட்டைக்
கடந்து, அறியாள்
அடியேன் மனைவி
பெ: Yes, only your’s sincerely
ஆ: கொண்டவன் வீடு
குடிசை என்றாலும்
மாளிகைப் போல நினைப்பாளே
பெ: Oh..really.., Don’t make me, blush…
ஆ: அவளோரு பாதி,
நானொரு பாதி
என்பது போல நடப்பாளே
பெ: The better half than the bitter half..
ஆ: என்பது போல நடப்பாளே
நான் என்றால்
அது அவளும்.. நானும்
அவள் என்றால்..
அது நானும்.. அவளும்
Presenter by Prakash 31