menu-iconlogo
huatong
huatong
avatar

Annamalai Annamalai

S. P. Balasubrahmanyam/K. S. Chithrahuatong
pintado4huatong
Lyrics
Recordings
பாடல்: அண்ணாமலை அண்ணாமலை

படம்: அண்ணாமலை

பாடியவர்கள்: எஸ்.பி.பி., கே.எஸ்.சித்ரா

இசை: தேவா

பாடலாசிரியர்: வைரமுத்து

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

(பல்லவி)

பெ: அண்ணாமலை அண்ணாமலை

ஆசை வச்சேன் எண்ணாமல

அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

அண்ணாமலை அண்ணாமலை

ஆசை வச்சேன் எண்ணாமலே

அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

ஆசையில

சொக்குதய்யா என் வயசு

ஒன் மீசையில

சிக்குதய்யா எம் மனசு

ஒன் காதுக்குள்ள காதல்

சொல்லும் கண்ணா

என் கொலுசு...

ஆ: அன்னக்கிளி அன்னக்கிளி

அத்தை பெத்த வண்ணக்கிளி

கூட்டுக்குள்ள எடம் இருக்கா

வசதி எப்படி

முன்னழகு

மூச்சு வாங்கி நிக்குதடி

ஒம்பின்னழகு

பித்தம் கொள்ள வைக்குதடி

நீ எந்த ஊரில் வாங்கி வந்த

இந்தச் சொக்குப் பொடி

பெ: அண்ணாமலை அண்ணாமலை

ஆசை வச்சேன் எண்ணாமல

அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

பெ: நேசம் உள்ள

மாமன் கொஞ்சம்

நெருங்கி வரட்டுமே

ஒன் நெத்தியில

விழுந்த முடி

நெஞ்சில் வீழட்டுமே

ஆ: ஈரத்தலை

துவட்டும் துணி என்

மேல் சிந்தட்டுமே

ஒன் இடுப்ப சுத்திக்

கட்டும் சேல என்னைக்

கட்டட்டுமே

பெ: அழகா..ன வீரனே

அசகாய சூ..ரனே

கருப்பான வண்ணனே

கலிகாலக் கண்ணனே

ஆ: நாடகம் தொடங்கினால்

நான் உந் தன் தொண்ட.னே..

பெ: அண்ணாமலை அண்ணாமலை

ஆ: ஹோய்

பெ: ஆசை வச்சேன் எண்ணாமல

ஆ: ஹைய்யோ

பெ: அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

ஆ: ப்ரம்மனுக்கு மூடு வந்து

ஒன்னைப் படைச்சிட்டா ன்

அடி காமனுக்கு மூடு வந்து

என்னை அனுப்பிட்டா. ன்

பெ: சாமிக்குந்தான் கருணை வந்து

அள்ளிக் கொடுத்துட்டா ன்

நான் தாவணிக்கு வந்த நேரம்

உன்னை அனுப்பிட்டா..ன்

ஆ: வாழ்ந்தாக வேண்டுமே

வளைந்தாடு கண்.மணி

வண்டாடும் பூவுக்கு

வலிக்கா.து அம்.மணி

பெ: உலுக்கித்தான் பறிக்கணும்

உதிரா.. து மாங்கனி

ஆ: அன்னக்கிளி அன்னக்கிளி

அத்தை பெத்த வண்ணக்கிளி

கூட்டுக்குள்ள எடம் இருக்கா

வசதி எப்.படி

முன்னழகு

மூச்சு வாங்கி நிக்குதடி

ஒம்பின்னழகு

பித்தம் கொள்ள வைக்குதடி

நீ எந்த ஊரில் வாங்கி வந்த

இந்தச் சொக்குப் பொடி.இ.இ.ஈ

பெ: அண்ணாமலை அண்ணாமலை

ஆ: ஹா ஹா ஹா

பெ: ஆசை வச்சேன் எண்ணாமல

ஆ: ஹோ ஹோ ஹோ

பெ: அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

ஆ: ச்சு ச்சு ச்சு ச்சு

பெ: ஆசையில

சொக்குதய்யா என் வயசு

ஒம்மீசையில

சிக்குதய்யா எம் மனசு

ஒன் காதுக்குள்ள காதல் சொல்லும்

கண்ணா என் கொலுசு..உ.உ.ஊ

ஆ: அன்னக்கிளி அன்னக்கிளி

அத்தை பெத்த வண்ணக்கிளி

கூட்டுக்குள்ள எடம் இருக்கா

வசதி எப்படி

பெ: அண்ணாமலை அண்ணாமலை

ஆசை வச்சேன் எண்ணாமல

அன்னந் தண்ணி உண்ணாமல

எண்ணி ஏங்குறேன்

More From S. P. Balasubrahmanyam/K. S. Chithra

See alllogo
Annamalai Annamalai by S. P. Balasubrahmanyam/K. S. Chithra - Lyrics & Covers