menu-iconlogo
logo

Velli Nilave Velli Nilave

logo
Lyrics
படம் : நந்தவனத் தேரு

இசை: இளையராஜா

பாடியவர்: SPB , உமாரமணன்

ஆ: வெள்ளி நிலவே

வெள்ளி நிலவே…

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே

உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே

அன்னை போல் வரவா நானும் சோறூட்ட..

உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார்

உன்னைச் சீராட்ட..

இருவரும் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

பாடலை HQ SuperHQ

(முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக

தயாரித்து வழங்குவது

ஆ: விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே

நா..ளும் உருகாதே

இருவரும்: உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை

வா..ழும் மறவாதே

ஆ: நிலா சோறு நிலா சோறு தரவா

நீயும் பசியாற

இருவரும்: குயில் பாட்டு

குயில் பாட்டு தருவோம்

நாங்கள் குஷியாக

ஆ: வானவில்லும் தானிறங்கி

பாய் போடுமே நீயும் தூங்க

ஆடும் மயில் தோகை எல்லாம்

தாலாட்டியே காற்று வீச

தேவ கன்னியே..

தேய்வதென்ன நீ தன்னாலே

இருவரும்: வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே

உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

CeylonRadio குழும

பதிவேற்றங்கள் அனைத்தும்

விலை செலுத்தித் தரமாக

தயாரிக்கப்படுபவையாகும்.

இலவசமாக பெறப்பட்டவை அல்ல.

பாடியபின் பாடலுக்கு

Thumbs Up வழங்கி ஊக்குவியுங்கள். நன்றி!

ஆ: சொந்தம் யாரு பந்தம் யாரு

நிலவே பாரு எனைப் பாரு

இருவரும் : நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம்

துடைப்பார் யாரு பதில் கூறு..

ஆ: உள்ளம் தோறும் கள்ளம் நூறு

அதை நீ பார்த்து எடை போடு..

இருவரும்: உன்னை காக்க தொல்லை தீர்க்க

வருவோம் நாங்கள் துணிவோடு..

ஆ: வானத்தோடு கோபம் கொண்டு

நீ போவதேன் பால் நிலாவே

மானம் காக்க நாங்கள் உண்டு

நீ நம்பியே பார் நிலாவே

தேவ கன்னியே.. ஏ.. தேய்வதென்ன நீ தன்னாலே

பெ: வெள்ளி நிலவு வெள்ளி நிலவு

உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

உள்ளம் திறந்து உள்ளம் திறந்து

தன் சோகம் தீர்ந்திட பாதை தேடுது

மின்னும் நிலவே உன்னாலே வருதே

பாடி சோறூட்ட..

தள்ளி நடந்தால் வேறாரு வருவார்

என்னைக் காப்பாற்ற

வெள்ளி நிலவு வெள்ளி நிலவு

உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

இருவரும்: தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா தந்தன் நானா

தந்தன் நானா தந்தன் நானா தந்தன் நானா..