என் கண்ணுகுள்ள கத்தாத, நெஞ்சுகுள்ள நச்சாத
சொல்லே போதும், உன் சொல்லே போதும்
என் அன்ப மொத்தோம் பிச்சானே, கோவம் வெச்சு தெச்சானே
இன்னு வேணு, ஓ இன்னு வேணு
விட்டுபோன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்திலுள்ள காதலெல்லாம்
கூட்டிகாத்து தாரேனே நான்
ஓட-ஓட நான் மேல சாஞ்சிக்க, தீர-தீர உன் தோள் இல்லையா?
ஈரம்-ஈரம் கண்ணோரம் மெதுவா போதுமே
ஓட-ஓட நான் மேல சாஞ்சிக்க, தீர-தீர உன் தோள் இல்லையா?
ஈரம்-ஈரம் என் கண்ணோரமா கோதுமே
என் கண்ணுகுள்ள கத்தாத, நெஞ்சுகுள்ள நச்சாத
சொல்லே போதும், உன் சொல்லே போதும்
யார் பழியோ?, யார் பிழையோ?, யார் வெச்ச கண்முழியோ
நான் கேட்ட கேள்விக்கு நீ மட்டும் தான் விடையோ
என்னாகும் என் விதியோ?, என்னாகும் என் விதியோ?
என்னாகும் என் விதியோ?, என்னாகுமோ?
விட்டுபோன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்திலுள்ள காதலெல்லாம்
கூட்டிகாத்து தாரேனே நான்
ஓட-ஓட நான் மேல சாஞ்சிக்க, தீர-தீர உன் தோள் இல்லையா?
ஈரம்-ஈரம் கண்ணோரம் மெதுவா போதுமே
ஓட-ஓட நான் மேல சாஞ்சிக்க, தீர-தீர உன் தோள் இல்லையா?
ஈரம்-ஈரம் என் கண்ணோரமா கோதுமே
ஆவலும் ஆழுது, பாடலும் நீளுது
ஏக்கமில்ல இது வேறெதோ புரியலையே
தீவிரம் தாங்கல, தீரவும் தோணல
தீவுல தூக்கிபோட்ட தானா ஒடஞ்சேன் உள்ள