menu-iconlogo
logo

Nagaraatha Nodiyodu (From "The Road")

logo
Lyrics
நகராத நொடியோடு நான் வாழ்கிறேன்

இயங்காத சிறகோடு வான் பார்க்கிறேன்

ஏனோ ஏனோ கண்ணீரோ?

யாரை நான் கேட்பேன்?

வீணோ வீணோ எல்லாமே?

யாரை நான் நோவேன்?

வாழ்வே என்மேல், ஏன் வன்மம்?

யாரின் கோபம் என் வாழ்கையோ?

காணும் எல்லாம், தீ என்றால்

எங்கே எங்கே என் தீபமோ?

நேர்மையே, சாபம் என்றால்

நானும் எங்கே போவதோ?

ஊர் எல்லாம், போ போ என்றால்

யாரின் தோளில் நான் சாய்வதோ?

விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்

புரியாத உலகோடு போராடினேன்

வானில் உண்டு விண்மீன்கள்

எங்கே என் வாழ்வில்?

போகும் எல்லாம் பேய்தேரில்

கண்ணீர் என் பூவில்

நாள் ஒன்று எல்லோர்க்கும் உண்டு

என்றால், நான் தேடும் நாள் எங்கே?

நூலில் ஆடும் பொம்மை போல

ஆடும், என் வாழ்வின் வேர் எங்கே?

பிழையே நீதி அதுவே சேதி

என்றால் இங்கே அறங்கள் ஏனோ?

இனி நான், இனி நான் யாரோ?

விடியாத இரவோடு நான் வாழ்கிறேன்

விரியாத சீறகொடு வான் பார்க்கிறேன்

வானில் உண்டு விண்மீன்கள்

எங்கே என் வாழ்வில்?

போகும் எல்லாம் பொய்த்தேரில்

எங்கே என் கோயில்?