menu-iconlogo
logo

Elangaathu Veesudhey

logo
avatar
Shreya ghoshallogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
Sing in App
Lyrics
பாடகா்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளா் : இளையராஜா

ஆண் : இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேக்குதே

பெண் : கரும்பாறை மனசுல

மயில் தோகை விரிக்குதே

மழைச்சாரல் தெளிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை கேட்டு

மனக்கதவு திறக்குதே

புதிய தாளம் போட்டு

உடல் காற்றில் மிதக்குதே

ஆண் : இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

பெண் : வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேக்குதே

பாடகா்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளா் : இளையராஜா

பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்

நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல

ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு

உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு

ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்

அன்னமடி இந்த நிலம் போல

சிலருக்குத் தான் மனசு இருக்கு

உலகம் அதில் நிலைச்சு இருக்கு

ஆண் : நேத்து தனிமையில போச்சு

யாரும் துணை இல்ல

யாரோ வழித்துணைக்கு வந்தால்

ஏதும் இணை இல்லை

பெண் : உலகத்தில் எதுவும்

தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

ஆண் : இளங்காத்து வீசுதே

இசை போல பேசுதே

பெண் : வளையாத மூங்கிலில்

ராகம் வளைஞ்சு ஓடுதே

மேகம் முழிச்சு கேக்குதே

பாடகா்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளா் : இளையராஜா

ஆண் : மனசுல என்ன ஆகாயம்

தினம்தினம் அது புதிர் போடும்

ரகசியத்தை யாரு அறிஞ்சா

அதிசயத்தை யாரு புரிஞ்சா

பெண் : விதை விதைக்கிற கை தானே

மலர் பறிக்குது தினம்தோறும்

மலர் தொடுக்க நாரை எடுத்து

யார் தொடுத்தா மாலையாச்சு

ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்

ஆடும் கிளி எல்லாம்

மூடும் சிறகிலே மெல்ல

பேசும் கதை எல்லாம்

தாலாட்டு கேட்டிடாமலே

தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

பெண் : கரும்பாறை மனசுல

மயில் தோகை விரிக்குதே

மழைச்சாரல் தெளிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

ஆண் : வானவில் குடையும் புடிக்குதே

புல்வெளி பாதை விரிக்குதே

வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை கேட்டு

மனக்கதவு திறக்குதே

பெண் : புதிய தாளம் போட்டு

உடல் காற்றில் மிதக்குதே

Elangaathu Veesudhey by Shreya ghoshal - Lyrics & Covers