எளங்காத்து வீசுதே
எச போல பேசுதே
எளங்காத்து வீசுதே
எச போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும் பாற மனசுல
மயில் தோக விரிக்குதே
மழச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாத விரிக்குதே
வானவில் கொடையும் பிடிக்குதே
புல்வெளி பாத விரிக்குதே
வானவில் கொடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு
மனக்கதவு தெறக்குதே
புதிய தாளம் போட்டு
உடல் காத்தில் மெதக்குதே
எளங்காத்து வீசுதே
எச போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
பின்னிப் பின்னிச் சின்ன
இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத்
துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
எணஞ்சு இருக்கு
ஒறவு எல்லாம் அமஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து ஒறவாடும்
அன்னமடி இந்த நெலம் போல
செலருக்குத் தான் மனசு இருக்கு
ஒலகம் அதில் நெலச்சு இருக்கு
நேத்து தனிமயில போச்சு
யாரும் தொணை இல்ல
யாரோ வழித்தொணைக்கு வந்தா
ஏதும் எணை இல்ல
ஒலகத்தில் எதுவும்
தனிச்சு இல்லயே
குழலில் ராகம் மலரில் வாசம்
சேர்ந்தது போல
எளங்காத்து வீசுதே
எச போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே