menu-iconlogo
logo

Paattu Varum

logo
Lyrics
பாட்டு வரும்

என்ன ...

பாட்டு வரும்

உன்னைப் பார்த்துக்

கொண்டிருந்தால் பாட்டு வரும்

ம்ம்ஹூம் ...

உன்னைப் பார்த்துக்

கொண்டிருந்தால் பாட்டு வரும்

அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

உன்னைப் பார்த்துக்

கொண்டிருந்தால் பாட்டு வரும்

அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

பாட்டு வரும்.

ஆஹா ...

பாட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்

அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்

அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்

எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்

எனக்கது போதும் வேறென்ன வேண்டும்

எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்

எனக்கது போதும் வேறென்ன வேண்டும்

பாட்டு வரும் பாட்டு வரும்

உன்னைப் பார்த்துக்

கொண்டிருந்தால் பாட்டு வரும்

அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டு கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்

அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்

காதல் என்றொரு சிலை வடித்தேன்

அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்

சிறையெடுத்தாலும் காவலன் நீயே

காவலன் வாழ்வில் பாதியும் நானே

சிறையெடுத்தாலும் காவலன் நீயே

காவலன் வாழ்வில் பாதியும் நானே

பாட்டு வரும் பாட்டு வரும்

அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்

அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்

மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன்

அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்.

ஏந்திய கைகளில் இருப்பவள் நானே

இறைவனை நேரில் வரவழைத்தேனே .

ஏந்திய கைகளில் இருப்பவள் நானே

இறைவனை நேரில் வரவழைத்தேனே

பாட்டு வரும்... பாட்டு வரும்

உன்னைப் பார்த்துக்

கொண்டிருந்தால் பாட்டு வரும்

அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

அதைக் கேட்டுக்​கொண்டிருந்தால்

ஆட்டம் வரும்

அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

Paattu Varum by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers