பச்சை கிளி முத்து சரம்
முல்லை கோடி யாரோ
பச்சை கிளி முத்து சரம்
முல்லை கோடி யாரோ,
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ....
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ ஆ...ஆ.....ஆ....
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ,
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ....
தத்தை போல தாவும் பாவை
பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவை தூவும்
வாடை காற்றும் உண்டு
வண்ண சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்த கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு,
கண்ணில் ஆடும் மாங்கனி
கையில் ஆடுமோ,
கண்ணில் ஆடும் மாங்கனி
கையில் ஆடுமோ,
நானே தரும் நாளும் வரும்
ஏனிந்த அவசரமோ...
பச்சை கிளி முத்து சரம்
முல்லை கோடி யாரோ,
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ....