menu-iconlogo
logo

En Janame

logo
Lyrics
ஓ என் ஜனமே, ஹ-ஹ-ஹ

நாங்க மாண்ட கதைய சொன்னா!

அந்த வெள்ளி மல இடியும்

விடி வெளக்கு நின்னெரியும்

நாங்க செத்த கதைய சொன்னா!

அந்தக் கல்லு மல இடியும்

கை வெளக்கு நின்னெரியும்

பெண்பாவம் பொல்லாதுன்னு, சாமி ஆக்குறீங்க

என்ன பெத்த ஜாதி ஜனமே

உங்க சதிவலையில் கொண்டவன பறிகொடுக்குறோமே

நீங்க தேரு ஓட்டும் திருணாவுல

நாங்க கதிகலங்குறோமே

இந்தத் தாழம் பொதருக்குள்ள

எந்தலைய வெட்டி கொல்லுறீங்க

நா கத்துங்குரல் கேக்கலையா?

நீங்க காதடைச்சி போனீங்களா

அந்த வீராதிவீரன் மேல

இந்தப் பொன்னியம்மா கொண்டக் காதல்

அந்தத் தாழம் பூ பூக்கும் தரணியெல்லாம் வாசம் வீசும்

பாப்பாத்தி ஈனமுத்து காதல் பொறுக்காம நீங்க

காட்டுல வழிமறிச்சி எங்கள கண்டதுண்டமாக்குனீங்க

பேதம் பாத்து ஜோடிசேர்க்கும் பண்ணை ஏவல் கூட்டங்களே

அந்தச் சூரியன கூறுபோட கூடிடுமோ சொல்லுங்களேன?

சிவசைல மலய தாண்டும் சேதுராயன் காதல்

அவன கதவடைச்சி கழுத்தறுத்து கொல்லும் வெறிக்கூட்டம்

காத்து மழ வெய்யிலிலும்

காதல் நெனப்ப தின்னும் இந்தப்

பளிச்சியம்மா கூடு

பாவூரு பூச்சியம்மா

பட்டபிரான் கூட ஒடமரத்துக் காட்டுக்குள்ள

ஒளிஞ்சிருந்தேன் வாழ

வேட்டநாயைப் போல

நீங்க அண்ணன் ஏழுபேரும்

உங்க ஒத்தத் தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே

உங்க ஒத்தத் தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களேண்ணா

ஆரியமாலா எந்தன் காதல் காத்தவராயன்

உங்க அதிகார ஆணவத்தால் கொலையுண்டு போனோம்

கொல்லிமல வெள்ளம் வந்து எள்ளிநகையாடும்

அந்தப் பாச்சூருக் கழுமரம்தான் பாவத்துல நிக்கும்

அந்தப் பாச்சூருக் கழுமரம்தான் பாவத்துல நிக்கும்

சத்தக்காரன் அப்புச்சியம்மா

முருகேசன் கண்ணகியம்மா

இளவரசன் நாயகியம்மா

நத்தீசு சுவாதியம்மா

எங்க காதுலையும், வாயுலையும்

நஞ்சு வெசத்த ஊத்தினேங்க

தண்டவாளம் மேல நின்னு

எங்கள கண்டதுண்டமா ஆக்குனீங்க

கல்லுமேல கல்லுபோட்டு

அட சதிகாரக்கூட்டமே

எங்கள் கட்டி வச்சு, கொண்ணேங்களே

கோகுல்ராஜி சங்கரையும்

கொன்ன சதிகாரங்களே

சாவும் போதும் சேராம

சாம்பளாவும் மிஞ்சாம

நாங்க துடி-துடுச்சு சாகுறோமே

சுத்தி நின்னு பாக்க

நம்ம பகையெல்லாம் மாத்தி ஒறவாட

வந்தேன் நந்தினியம்மா

எங்கருவ அறுத்து

என்ன கெணத்துல எறிஞ்சீங்களே

ஏ... சதிகாரக்கூட்டமே!

நா பொணமா மெதக்கும்போதும்

பொய்க் கேசு போட்டீங்களே!

ஓ என் ஜனமே, ஹ-ஹ-ஹ

கோடி கோடி தூரல் எல்லாம்

ஆறு கடல் ஆவது போல்

வெண்டான்டா உலகத்தயே

பேத்தெடுக்கும் மந்திரமே

பூமி உள்ள காலம்வர காதல்தாண்டா வல்லமையே!

என் ஜனமே, என் ஜனமே, என் ஜனமே

ஜனமே ஜனமே ஜனமே

என் ஜனமே, என் ஜனமே, என் ஜனமே

ஜனமே ஜனமே ஜனமே

எங்கள பெத்த ஜாதி ஜனமே!

En Janame by Tenma - Lyrics & Covers