காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
விடுவுழி விடுவுழி பரத்தலானே
விடுவுழி விடுவுழி பரத்தலானே
யாரினும் இனியன் பேரன்பினனே
சாதல் அஞ்சேன்
அஞ்சுவல் சாவின்
சாதல் அஞ்சேன்
அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிதாகுவதாயின்
பிறப்பு பிறிதாகுவதாயின்
பிறப்பு பிறிதாகுவதாயின்
பிறப்பு பிறிதாகுவதாயின்
ஏ பிறப்பு பிறிதாகுவதாயின்
பிறப்பு பிறிதாகுவதாயின்
மறக்குவென் கொல்
என் காதலன்
எனவே
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே
பெருந்தேன் இழைக்கும்
நாடனோடு நட்பே
குக்கூ என்றது கோழி
அதனெதிர் திக்கென்றது
என் தூஉ நெஞ்சம்
தோள்தோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை
வந்தன்றால்
எனவே எனவே
நின்ற சொல்லர்
நீடுதோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
அன்னாந்து ஏந்திய
வனமுலை தளரினும்
நன்னெடும் கூந்தல்
நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி
நீத்தல் ஓம்புமதி
காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
விடுவுழி விடுவுழி பரத்தலானே
விடுவுழி விடுவுழி பரத்தலானே
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
நல்லுரை இகந்து புல்லுரைத்தாய்
பெயல் நீர்க்கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா
வெள்ளம் நீந்தி அரிது
அவா உற்றனை நெஞ்சம்
அரிதாற்றி அல்லல் நோய்நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்
அரிதாற்றி அல்லல் நோய்நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்
பூவிடைப் படினும்
ஆண்டு கழிந்தன்ன
நீருறை அன்றில் புணர்ச்சிபோலப்
பிரிவரிதாகி அண்டாக் காமமொடு
உடன் உயிர்ப்போகுக
உடன் உயிர்ப்போகுக
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் காதலர்
யான் ஆகியள்
நின் நெஞ்சு நேர்பவளே
காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழி பரத்தலானே
ஓ விடுவுழி விடுவுழி பரத்தலானே
காதலரா காதலர்