menu-iconlogo
huatong
huatong
avatar

Nilavu Oru Pennagi

Tm Soundararajanhuatong
ice3creamhuatong
Lyrics
Recordings
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற

குழலோ நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோ

பதிவேற்றம்:

புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக

புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக

பருவமொரு களமாகப் போர்

தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

பவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற

குழலோ நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற

குழலோ நீந்துகின்ற குழலோ

More From Tm Soundararajan

See alllogo