menu-iconlogo
huatong
huatong
avatar

Vazha Ninaithal Vazhalam

T.M.Sounderarajan/P. Susheelahuatong
pmrsmachuatong
Lyrics
Recordings
பெண்: ஆஆஆஆஆ

ஓஹொஹோ

ஆஆஆ.. ஓஓஓ

ஆஹஹா

ஓஹொஹோ..

பெண்: வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும்

சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும்

சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

பெண் : பார்க்கத் தெரிந்தால்

பாதை தெரியும்

பார்த்து நடந்தால்

பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால்

கதவு திறக்கும்

கதவு திறந்தால்

காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால்

கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும்

சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

ஆண்: கண்ணில் தெரியும்

வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும்

காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை

என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன்

மனமா இல்லை வாழ்வினில்

ஆழக் கடலில்

தோணி போலே

அழைத்துச் சென்றால்

வாழ்கிறேன்

பெண்: ஏரிக் கரையில்

மரங்கள் சாட்சி

ஆண்: ஏங்கித் தவிக்கும்

இதயம் சாட்சி

பெண்: துள்ளித் திரியும்

மீன்கள் சாட்சி

ஆண்: துடித்து நிற்கும்

இளமை சாட்சி

பெண்: இருவர் வாழும்

காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம்

வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில்

தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

ஆண்: வாழ நினைத்தோம்

வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில்

தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

More From T.M.Sounderarajan/P. Susheela

See alllogo