menu-iconlogo
logo

Vaaren Vaaren

logo
Lyrics
ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்

ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்

இரு இரு என் கூட இரு

ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பக்கொடு

சிரி சிரி சிரி சிரி நீ

உன் சிரிப்புக்கு அடிமை நீ

ஹை ச ரி க ம ப த நி ச நீ

என் பாட்டுக்கு சங்கதி நீ

ஹே முனி முனி முனி முனியா

உன் வார்த்தைகள் நெல் மணியா

அதைக் கேட்டதும் பொடிபொடியாய்

பசி குறையுது இப்படியாய்

உன் பாதம் பட்ட மண்ணக்கூட

பாதுகாக்கப் போறேன்

உன் பார்வை பட்ட கல்லைக்கூடக்

கும்பிடத்தான் போறேன்

வாறேன் வாறேன் உன் கூட வாறேன்

ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்

இரு இரு என் கூட இரு

ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பக்கொடு

ஏ உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா

யார் பாசம் அதிகம் சொல்லு?

அட உன்பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல

ஒன்னாக நிக்கும் பாரேன்

ஹே... செம்மீனா பொன்மீனா கல்மீனா

நான் வளக்க எந்த மீன நீயும் தாறே...

ஏ முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத

விண்மீனை நான் கொடுப்பேன்...

ஹே சொந்தபந்தம் ஒன்னும் இல்ல

சொத்து சொகம் தேவையில்லை

உன்னப் பார்த்தால் போதும் போதும்...

ஹே ரத்தபந்தம் நீயும் இல்ல

உன் போல் சொந்தம் யாரும் இல்ல

வேற என்ன வேணும் வேணும்?

உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற

பாசக்காரி தான்

உன் விரல் சொடுக்கில பரபரக்கிற

வேலக்காரன் நான்.

ஹா(ன்).. இரு இரு

வாறேன் வாறேன்

என் கூட இரு

கூட வாறேன்

ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு

ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்

ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்

நா நா நான் சொல்லாமக் கொள்ளாம

காணாமப் போனா

என்ன செய்வ என்ன செய்வ? ஹ ஹ.. (சிரிப்பு)

நீ இல்லாம உண்ணாம தூங்காம இருப்பேன்

என்னத் தேடி நீ வருவ...

உன்னப் பார்த்தாலும் பார்க்காம

பேசாமப் போனா

என்ன செய்வ என்ன செய்வ ஹே.. ஏ ஏ...

உன்னப் பாக்காத கண்ணில்ல கேக்காத

காதில்ல நீ இல்லேன்னா நானே இல்ல..

ஹே.. பாதையில முள்ளிருந்து

பாதத்துல குத்திப்போட்டா

என்ன செய்வ என்ன செய்வ?...

இந்த பூமி மேல வாழுகிற

முள்ளுமரம் எல்லாத்தையும்

வேரோடத்தான் வெட்டி சாய்ப்பேன்...

ஏன் படபடக்கிற துடிதுடிக்கிற

எனக்கு முன்னால

என் நிழல் நடக்குது நிழல் நடக்குது

உனக்குப் பின்னால

ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்

ஏழு ஜென்மத்துக்கும் என் உசுரத் தாறேன்

ஓ இரு இரு

ஹ்ம் ஹ்ம்

என் கூட இரு

ஹே ஹே

ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பக்கொடு

சிரி சிரி சிரி சிரி நீ

உன் சிரிப்புக்கு அடிமை நீ

ஹை ச ரி க ம ப த நி ச நீ

என் பாட்டுக்கு சங்கதி நீ

ஹ்ம் ஹ்ம்.. முனி முனி முனி முனியா

ஹ்ம் ஹ்ம்

உன் வார்த்தைகள் நெல் மணியா

ஹை ஹை

அதைக் கேட்டதும் பொடிபொடியாய்

பசி குறையுது இப்படியாய்

உன் பாதம் பட்ட மண்ணக்கூட

பாதுகாக்கப் போறேன்

உன் பார்வை பட்ட கல்லைக்கூடக்

கும்பிடத்தான் போறேன்

அ ஆ அ ஆ...

அ அ ஆ ஆ ஆ...

அ ஆ அ ஆ...

அ அ ஆ ஆ அ...

அ ஆ அ ஆ...

அ அ ஆ ஆ ஆ...

அ ஆ அ ஆ...

அ அ ஆ ஆ அ...