menu-iconlogo
logo

Ennavale Adi Ennavale (Short)

logo
Lyrics
கோகிலமே நீ குரல் கொடுத்தால்

உனைக் கும்பிட்டுக்

கண்ணடிப்பேன்

கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு

உந்தன் கூங்தலில்

மீன் பிடிப்பேன்

வென்னிலவே உனைத் தூங்கவைக்க

உந்தன் விரலுக்கு

சொடுக்கெடுப்பேன்

வருடவரும் பூங்காற்றையெல்லாம்

கொஞ்சம் வடிகட்டி

அனுப்பிவைப்பேன் –

என் காதலின் தேவையை காதுக்குள்

ஓதிவைப்பேன் –

உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக்

கவிதைகள் என்றுரைப்பேன்…

என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இடத்தையும் மறந்து விட்டேன் –

உந்தன்

கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்

காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்

கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று

கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு

கண்விழி பிதுங்கி நின்றேன்

Ennavale Adi Ennavale (Short) by Unni Krishnan - Lyrics & Covers