பாடல் பதிவேற்றம் : DHAYA
ஆண் : ஹே
ஹே ஹே
ஆண் : ………………….
ஆண் : ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை
பொய் தான் என்பதா என் தேகம்
முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே
பெண் : என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே உன்
ஈர புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில்
நீ ஒற்றை பூவடா உன் வாசம்
தாக்கியே மலர்ந்தேன் உயிரே
ஆண் : ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
பாடல் பதிவேற்றம் : DHAYA
ஆண் : ………………….
ஆண் : ………………….
குழு : ………………….
ஆண் : உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்
பெண் : உன் தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி
கெஞ்சுது என் பாதம்
ஆண் : என் வாழ்க்கை
வரலாற்றில் எல்லாமே
உன் பக்கங்கள்
பெண் : உன்னாலே
என் வீட்டின் சுவர் எல்லாம்
ஜன்னல்கள்
ஆண் : ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஆண் : ………………….
பெண் : ………………….
ஆண் : உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த
காற்றுகள் மட்டும்
மோட்சத்திலே சேரும்
பெண் : அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய்
எழுப்பிய கோபுரம் நொடியில்
குடை சாயும்
ஆண் : உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது
பெண் : உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது
ஆண் : ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை
பொய் தான் என்பதா என் தேகம்
முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம்
மொய்க்கின்றதே
பெண் : என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே உன்
ஈர புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில் நீ
ஒற்றை பூவடா உன் வாசம்
தாக்கியே மலர்ந்தேன் உயிரே
ஆண் : ………………….
பாடல் பதிவேற்றம் : DHAYA