ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
பெண் : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தப் பாடல்
இனி என் ஜீவன் உன்னோடு
வருவேன் நாளும் பின்னோடு
ஆண் : நாள் முழுதும் நான் எழுதும்
காதல் கதை புனிதம்
பெண் : பூமுடிக்கும் நாள் வரைக்கும்
காத்திருப்பேன் விரதம்
ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
படம்: புதிய ஸ்வரங்கள்
இசை: இசைஞானி இளையராஜா
பாடகர்கள்: கே.ஜெ. யேசுதாஸ், உமா ரமணன்
இனிய இப்பாடலை (Super HQ HQ )
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
ஆண் : சூர்யோதயம்
சந்திரோதயம் காலை மாலை நீயாக
பெண் : பெண்ணோவியம் பொன்னோவியம்
சூடும் பூவும் நீயாக
ஆண் : மாலை போலவே மாது
மார்பில் ஆடிடும்போது
பெண் : வேதங்கள் ஓத
வெட்கங்கள் மோத
கையும் கையும் கலந்துக் கொள்ளலாம்
ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
அழகிய பாடலையும் தமிழ் வரிகளையும்
பெண் : பன்னீரையும் வெந்நீரென
தீண்டும்போது நான் கண்டேன்
ஆண் : பூமஞ்சமும் முள் மஞ்சமாய்
தூங்கும்போது நான் கண்டேன்
பெண் : காற்றில் காய்ந்திட மெல்ல
காதல் பனித் துளி அல்ல
ஆண் : தேகங்கள் இரண்டு
ஜீவன்தான் ஒன்று
ஒன்றை ஒன்று விலகக் கூடுமா
பெண் : ஓ..கானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தப் பாடல்
இனி என் ஜீவன் உன்னோடு
வருவேன் நாளும் பின்னோடு
ஆண் : ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
பெண் : பூமுடிக்கும் நாள்
வரைக்கும் காத்திருப்பேன் விரதம்
ஆண் : நாள் முழுதும் நான்
எழுதும் காதல் கதை புனிதம்
ஓ..வானம் உள்ள காலம் மட்டும்
வாழும் இந்தக் காதல்
இதுதான் தேவன் ஏற்பாடு
இணைத்தான் பூவை காற்றோடு
தரமான பாடல்களை smulian hq
CeylonRadio Tag கள் மூலம் தேடி
பாடி மகிழுங்கள்!