உள்ள வலிக்குது
நெஞ்சு தவிக்குது
என்ன தாண்டி போனாளே
பிஞ்சு மொழியில
கொஞ்சி சிரிச்சவ
நெஞ்ச வீசிப் போனாளே
என் அன்பால நீ வந்து தாலாட்டுன
அது இன்றோடு மண்ணானதே
வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன
உடஞ்சாலும் வாழுவேன்
இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சிடுமா
என் தூக்கம் போச்சு
கனவுல அவ வருவா
எங்கும் போகும் போது
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா
சொல்லாமலே என் வேதன
அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ
இல்லாம நீயே என் நெஞ்சோரமா
பல கோடி காயங்கள் உருகுவாமோ
தவிக்கிற மனசுக்கு தெரியலியே
கலவரக் காதலி இனி இல்லையே
விழிக்கிற எரிமல அடங்கலயே
கதிரென அடக்கியும் முடியலியே
கேளடா நிஜம் கேளடா
பாவியின் இதயத்தில் நீயடா
ஆறுதல் இங்கு யாரடி
தனிமையின் கொடுமையை பாரடி
இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சுடுமா
என் தூக்கம் போச்சு
கனவுல அவ வருவா
எங்கு போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா