பெண்: தேன் உண்ணும் வண்டு
மாமலரை கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ
பூங்கொடியே நீ சொல்லுவாய்
ஆண்: வீணை இன்ப நாதம்
ஏழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே..ஏ....
காற்றினிலே
தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும்
பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ
ஓ ஓ ஓ ஓ
புதுமை இதில் தான் என்னவோ
ஆண்: மீன் நிலவும் வானில்
வெண் மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ...
மென் காற்றே நீ சொல்லுவாய்
பெண்: கான மயில் நின்று
வான் முகிலை கண்டு
களித்தாடும் விதம் போலவே..ஏ..
கலை இதுவே
வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகல எனும்
மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே
ஓ ஓ ஓ ஓ
காணாததும் ஏன் வாழ்விலே
கண்ணோடு கண்கள்
பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல்
வா..ழ்வதும் ஏனோ
கலை மதியே நீ சொல்லுவாய்
பெண் : ஓ ஓ ஓ ஓ
கலை மதியே நீ சொல்லுவாய்
ஓ ஹோ ஓஹோஹோ
ஓ ஹோ ஓஹோஹோ