ஆ: வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட ஆசை தானோ
பலகோடி மலர் அழகை மூடி வைத்து
மனதைக் கொள்ளையடிப்பதும் ஏனோ
வாடிக்கை மறந்ததும் ஏனோ,
பெ: வாடிக்கை மறந்திடுவேனோ
என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புதுமங்கை எந்தன் மனதில் பொங்கி வரும்
நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ
பெ: அ..ஆ..ஆ..
இருவரும்: அ..ஆ...ஆ..ஆ..
ஆ: அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது,
பல உயிர்கள் மகிழவதும் ஏது,
நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பமெனும்
உணர்வை தனித்துப் பெற முடியாது,
பெ: ஓ..ஓ..ஓ..
அந்தி நேரம் போனதால் ஆசை
மறந்தே போகுமா,
அந்தி நேரம் போனதால் ஆசை
மறந்தே போகுமா,
அன்புக் கரங்கள் சேரும் போது
வம்பு வார்த்தைகள் ஏனோ,
இன்ப வேகம் தானோ,
பெ: வாடிக்கை மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புதுமங்கை எந்தன் மனதில் பொங்கி வரும்
நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ,
பெ: அ..ஆ..ஆ..
இருவரும்: அ..ஆ..ஆ..ஆ....ஆ....
ஆ: காந்தமோ இது கண்ணொளி தானோ
காதல் நதியில் நீந்திடும் மீனோ,
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ
கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ,
பெ: பொறுமை இழந்திடலாமோ
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ,
நான் கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ,
இருவரும்: சைக்கிள் ஓட மண் மேலே
இரு சககரம் சுழல்வது போலே,
அணை தாண்டி வரும் சுகமும்
தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே
இருவரும்: அ..ஆ..ஆ..ஆ....ஓ..ஓ..ஓ..