பாடல்: எருக்கன்செடிகிட்ட
பாடியவர்கள்: ஆந்தகுடி இளையராஜா
மற்றும் லட்சுமி
ஆண்: எருக்கன்செடிகிட்ட
காதல எடுத்து சொல்லிபுட்டேன்
அந்த எலந்தமரத்துல ஏதேதோ
எழுதிவச்சிபுட்டேன்
அந்தமேற்காட்டு
மூலையில மேகங்கருக்குதடி ஏன் ராசாத்தி
ஒன்ன எண்ணி ராகம்பொறக்குதடி..
ஒத்தயடிபாத வழிகொடுக்க
மெத்தபோல கோரபுள்ளும் கெடக்க
மானே நீ மனசெறங்கி ஓடிவா...
அந்த மடையாத்து தண்ணிபோல ஓடிவா...
ஏ.. மானே நீ மனசெறங்கி ஓடிவா..
அந்த மடையாத்து தண்ணிபோல ஓடிவா...
எருக்கன்செடிகிட்ட
காதல எடுத்து சொல்லிபுட்டேன்
அந்த எலந்தமரத்துல ஏதேதோ
எழுதிவச்சிபுட்டேன்
அழகான நாட்டுபுற பாடலை
உங்களுக்கு வழங்குவது:
கா.உ.சந்தானம்உஷா
ஆண்: செம்பருத்திபூவு
செக்கசெவப்புல ரோ..சாமுத்தம்
இந்த பச்சபயபுள்ள பிஞ்சிமனசுல
கே..க்கும் நித்தம்
ஆலமரகிளி பொந்துகுள்ள அங்க
கே..க்கும் சத்தம்
அது சோடிகிளியதான்
பாடி அழைக்கிது பா..ரு நித்தம்
வெட்கபட்டு வௌகுறேன்
அப்பகூட சிரிக்கிற
அன்னத்தபோல் நடக்குற ஆச நெஞ்ச உசுப்புற
எழுந்தாடிநான் எசபாடுறேன்
பச்சகிளி பாதம் பாத்திருக்கேன்
எருக்கன்செடிகிட்ட
காதல எடுத்து சொல்லிபுட்டேன்
அந்த எலந்தமரத்துல ஏதேதோ
எழுதிவச்சிபுட்டேன்
பெண்: எட்டுபுள்ளிகோளம் ஒன்ன வரைஞ்சேன்
ஓ..ன் நெனப்புல
இந்த தட்டுகெட்டபுத்தி தானா வந்திருச்சி
ஓ..ன் கிறுக்குல..
கூரபட்டு கட்ட கூப்பிடுது அட
ஏன்..சேலதான்
இந்த சின்னபுள்ள பாசம்
கூடிபோச்சி அட ஓ..ன்மேலதான்
காத்திருக்கும் காதலுக்கு
காத்துலநான் தூதுவிட்டேன்
செங்கமங்க சாமத்துல
சேந்திடதான் சொல்லிவிட்டேன்
அடகாக்குற அந்த காதல
அழகாநான் ஒப்படைப்பேன்
எருக்கன்செடிகிட்ட
காதல எடுத்து சொல்லிபுட்டேன்
அந்த எலந்தமரத்துல ஏதேதோ
எழுதிவச்சிபுட்டேன்
அந்தமேற்காட்டு
மூலையில மேகங்கருக்குதய்யா ஏன் ராசாவே
ஒன்ன எண்ணி ராகம்பொறக்குதய்யா..
ஒத்தயடிபாத வழிகொடுக்க
மெத்தபோல கோரபுள்ளும் கெடக்க
மாமா நீ மனசெறங்கி ஓடிவா...
அந்த மடையாத்து தண்ணிபோல ஓடிவா...
ஏ.. மாமா நீ மனசெறங்கி ஓடிவா..
அந்த மடையாத்து தண்ணிபோல ஓடிவா..
ஆண்: எருக்கன்செடிகிட்ட
காதல எடுத்து சொல்லிபுட்டேன்
அந்த எலந்தமரத்துல ஏதேதோ
எழுதிவச்சிபுட்டேன்
நன்றி
பதிவேற்றியவர்:
கா.உ.சந்தானம்உஷா